AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாடா கார் வாங்கப்போறீங்களா? விலை உயர்வை தவிர்க்க உடனே இதை பண்ணுங்க

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், கார்களின் விலை 1.5 சதவிகிதம் வரை உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார்கள் வாங்க திட்டமிட்டு வருபவர்கள் ஜூன் மாதத்திற்குள் முன்பதிவு செய்தால் தற்போதைய விலையிலேயே வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

டாடா கார் வாங்கப்போறீங்களா? விலை உயர்வை தவிர்க்க உடனே இதை பண்ணுங்க
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jun 2026 17:48 PM IST

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தங்கள் கார்களின் விலையை வருகிற ஜூலை 1, 2026 முதல் உயர்தவுள்ளதாக அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் உட்பட அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், கார்களின் விலை 1.5 சதவிகிதம் வரை உயர்த்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கும் ஏற்பட கார்களின் விலை உயர்வு மாறுபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

விலை உயர்வுக்கான காரணத்தையும் டாடா மோட்டார்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதன் படி மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிரிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. செலவின் பெரும்பகுதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டாலும், அதன் சிறிய அளவு வாடிக்கையாளரிடம் இருந்தும் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இனி ரயில் டிக்கெட் புக் செய்ய புதிய வெப்சைட் – அதில் என்ன ஸ்பெஷல்? வெளியான அறிவிப்பு

எந்தெந்த கார்களின் விலை உயரும்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலை உயரும், குறிப்பாக டாடா பஞ்ச், நெக்சான், கர்வ், ஹேரியர், சஃபாரி, டியாகோ, டிகார், ஆல்ட்ரோஸ் மற்றும் எலக்ட்ரிக் கார்களான டியோகா, பஞ்ச், கர்வ் போன்ற கார்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே எம்ஜி மோட்டார், பிஎம்டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ஹோண்டா கார் போன்ற நிறவனங்கள் தங்கள் கார்களின் விலை உயர்த்தியுள்ளன.

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக உலக அளவில் கார்களின் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்டீல், அலுமினியம், ரப்பர் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதல் அழுத்ததை சந்தித்து வருகின்றன.

இதையும் படிக்க  : இனி வங்கிகளில் கடன் வாங்க சிபில் ஸ்கோர் மட்டும் போதாது.. இவற்றை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இதன் ஒரு பகுதியாக வருகிற ஜூலை 1, 2026 முதல் புதிய விலை அமல்படுத்தப்படவுள்ள நிலையில் புதிய கார்கள் வாங்க திட்டமிட்டு வருபவர்கள் ஜூன் மாதத்திற்குள் முன்பதிவு செய்தால் தற்போதைய விலையிலேயே வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் கார் வாங்க முடிவெடுத்துள்ளவர்கள் குறிப்பாக டாடா கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது அவர்கள் பெரும் தொகையை சேமிக்க உதவும்.

 

Follow Us