IND vs SL: 41ல் 5 மட்டுமே சரி.. டிஆர்.எஸ்ஸில் சொதப்பும் கேப்டன் கில்!
Captain Shubman Gill:சுப்மன் கில் தனது கேப்டன்சி வாழ்க்கையில் மொத்தம் 41 டி.ஆர்.எஸ் எடுத்துள்ளார். அவற்றில், ஐந்து மட்டுமே வெற்றிகரமாக அமைந்துள்ளன. மீதமுள்ள அனைத்து டி.ஆர்.எஸ் முயற்சிகளும் எதிரணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் காலி டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் அதே தவறைச் செய்தார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு (IND vs SL) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி 3 நாட்கள் நடைபெற்றுள்ளதுடன், இதுவரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், இந்திய அணியின் (Indian Cricket Team) மோசமான பீல்டிங், டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்த கேப்டன் சுப்மன் கில் எடுத்த முடிவும் அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக, கடந்த 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்லிங் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக புதிய இன்னிங்ஸைத் தொடங்கிய கில், இதுவரை ஒரு வீரராக திறம்பட செயல்பட்டுள்ளார். கேப்டனாக முடிவெடுப்பதில் அவர் குறைந்த அளவே வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், கில் டி.ஆர்.எஸ் எடுப்பதில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.
டிஆர்.எஸ்ஸில் சொதப்பும் கேப்டன்:
This is what happens when you don’t listen to the man who is Exceptional in DRS Calls 🤷🏻
Shubman Gill Should only Ask KL For Review Just Like Rohit does in ODIs, He always trusts KL’s Callpic.twitter.com/mzUGV6hnsc
— 𝙎. (@KLfied_) July 25, 2025
ALSO READ: 90க்கே 5 விக்கெட்டுகள் இழப்பு.. 284 ரன்களை கொண்டு வந்த தினுஷா – டிக்வாலா ஜோடி..!
சுப்மன் கில் தனது கேப்டன்சி வாழ்க்கையில் மொத்தம் 41 டி.ஆர்.எஸ் எடுத்துள்ளார். அவற்றில், ஐந்து மட்டுமே வெற்றிகரமாக அமைந்துள்ளன. மீதமுள்ள அனைத்து டி.ஆர்.எஸ் முயற்சிகளும் எதிரணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.
கில் செய்த தவறு:
Captain Shubman Gill has won just 5 out of 41 DRS reviews man. 😭🙏 pic.twitter.com/fSpUFtjDX2
— Ahmed Says (@AhmedGT_) August 17, 2026
இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் காலி டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் அதே தவறைச் செய்தார். இலங்கை அணியின் 30வது மற்றும் 35வது ஓவர்களில் கில் எடுத்த டி.ஆர்.எஸ் (DRS) எதிரணிக்குச் சாதகமாக அமைந்தது. இதன் விளைவாக, 3 டி.ஆர்.எஸ்-களில் இரண்டு முற்றிலும் வீணடிக்கப்பட்டன.
ALSO READ: முக்கியமான 4வது நாள்.. மழையால் இந்தியா – இலங்கை போட்டி பாதிக்குமா?
டி.ஆர்.எஸ்-ஐ வீணடிப்பதற்கு கில் மட்டும் காரணமல்ல. மாறாக, டி.ஆர்.எஸ் எடுப்பதற்கு முன்பு சுப்மன் கில், பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பரிடம் பலமுறை கலந்தாலோசிக்கிறார். இந்த இருவருடன் சேர்த்து, மற்ற வீரர்களின் ஆலோசனையின் பேரிலும் கில் டி.ஆர்.எஸ் எடுக்கிறார். எதிர்காலத்தில் டி.ஆர்.எஸ் எடுக்கும்போது கில் எச்சரிக்கையுடன் செயல்படுவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்