யுஏன் ஆக்டிவேட் செய்ய UMANG செயலி மூலம் Face Authentication செய்ய வேண்டும்.. புதிய விதி!
Face Authentication Via UMANG App | ஊழியர்களின் நலனுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பயனர்கள் கூடுதல் பாதுகாப்பை பெற உமாங் செயலி மூலம் Face Authentication செய்வது அவசியமாகி உள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) ஊழியர்கள் மிக விரைவாக சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. ஊழியர்கள் பிஎஃப் பணத்தை எடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், நிமிடங்களில் யுபிஐ (UPI – Unified Payment Interface) மற்றும் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) வழியாக பணத்தை எடுக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சத்தின் இறுதிகட்ட சோதனை நிறைவு பெற்றுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ள நிலையில், இந்த அம்சம் எப்போது வேண்டுமானாலும் ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ பயனர்களுக்கு விதிகப்பட்டுள்ள விதி ஒன்று மேலும் கடுமையாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உமாங் செயலி வழியாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் மேற்கொள்ள வேண்டும்
யுஏஎன் எண்ணை உருவாக்குவதற்கோ அல்லது ஆக்டிவே செய்வதற்கோ ஓடிபி மற்றும் கைரேகை சரிபார்ப்புக்கு பதிலாக உமாங் செயலி வழியாக ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் இப்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் உடன் இணைக்கப்பட்டு காலாவதியான மொபைல் எண்களுக்கு ஓடிபி அனுப்ப முடியாமல் தோல்வி அடைவதன் காரணமாக, குறிப்பாக முதியவர்களுக்கு ஏற்படும் கைரேகை உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாக இந்த அம்சம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?
இந்த அம்சம் ஏம் மிகவும் அவசியமாக உள்ளது?
இந்த அம்சத்தின் மூலம் உண்மையாக கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே யூஏஎன்-களை செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் பயனர்கள் மற்றும் அவர்களுடைய பணத்திற்கு பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. இந்த அம்சத்தின் மூலம் மோசடி அபாயம் குறைகிறது. இதில் இன்னொரு கூடுதல் சிறப்பு அம்சம் உள்ளது. அது என்னவென்றால் பிஎஃப் பயனர்கள் தங்களது வீட்டில் இருந்தே இந்த செயல்முறையை செய்து முடிக்கலாம்.
இதையும் படிங்க : உங்கள் சம்பளம் ரூ. 15,000-ஆ? செலவு போக உங்களால் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்!
பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.