டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்திய மத்திய அரசு!
Windfall Tax Hiked For Diesel And ATF | மேற்கு ஆசியா போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ல நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளது.
ஈரான் போர் (Iran War) முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் மத்திய அரசு ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது, டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் வரியை (Windfall Tax) உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் மீண்டும் டீசல் விலை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை உயர்த்தியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டீசல், விமான எரிபொருள் மீதான விண்ஃபால் வரியை உயர்த்திய அரசு
விண்ட்ஃபால் வரி உயர்வு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.13.5-ல் இருந்து ரூ.14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ரூ.9.5-ல் இருந்து ரூ.12.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியில் மாற்றம் செய்யாத மத்திய அரசு அதனை, லிட்டருக்கு ரூ.1.5 என்ற அளவிலே வைத்துள்ளது.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் நாமினி இணைக்க வேண்டுமா?.. ஸ்மார்ட்போன் மூலம் சுலபமாக மேற்கொள்ளலாம்!
மார்ச் மாதம் முதல் வரியை மாற்றி அமைத்து வரும் அரசு
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் போர் தொடங்கிய நிலையில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோ மற்றும் டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தேக்கம் ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து அதிக லாபம் பார்ப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க : ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?
இதன் காரணமாக தான் மத்திய அரசு மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கான ஏற்றுமதி கட்டணத்தை உயர்த்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.