பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!
PM Kisan 23rd Installment | பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒருமுறை பணம் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் இதுவரை 22 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தவணை பணம் நாளை வரவு வைக்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana). இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த பணம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இதுவரை 22 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தவணை எப்போது வரவு வைக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், பிஎம் கிசான் 23வது தவணையை நாளை (ஜூன் 20, 2026) விவசாயிகளின் வங்கி கணக்கில் பிரதமர் மோடி வரவு வைக்க உள்ளார்.
விவசாயிகளின் வங்கி கணக்கில் நாளை வரவுள்ள ரூ.2,000
சிறு, குரு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிஎம் கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு 22 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை 23வது தவணை பணம் வரவு வைக்கப்பட உள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தாரகேஸ்வர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பணத்தை வரவு வைக்க உள்ளார். அதாவது, சுமார் 9.44 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!
ரூ.18,880 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது
இந்த 23வது தவணையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.18,880 கோடி வரவு வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019, பிப்ரவரி 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதுமுதல் இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு ரூ.4.46 லட்சம் கோடி பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?
இந்த 23வது தவணையை பெற விவசாயிகள் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.