AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிஎம் கிசான் 23வது தவணை.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

PM Kisan 23rd Installment | இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் பிஎம் கிசான். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு மூன்று முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 23வது தவணை வரவு வைக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்கலாம்.

பிஎம் கிசான் 23வது தவணை.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jun 2026 17:36 PM IST

இந்திய விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் ஒரு அட்டகாசமான திட்டமாக பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana) உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணம் மொத்தமாக வரவு வைக்கப்படாமல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும். அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

பிஎம் கிசான் 23வது தவணை

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை விவசாயிகளின் வங்கி கணக்கில் 22 தவணைகளாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், 23வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டு இருந்தனர். அந்த வகையில், இன்று (ஜூன் 20, 2026) மதியம் 3.45 மணிக்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் பிஎம் கிசான் 23வது தவணை வரவு வைக்கப்படும் என பிஎம் கிசான் இணையதளத்தில் கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க : வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!

இந்த நிலையில், விவசாயிகளின் வங்கி கணக்கில் 23வது தவணை பணம் வரவு வைக்கப்பட்டதா, அதனை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

23வது தவணை பிஎம் கிசான் பணம் வரவு வைக்கப்பட்டதா?

  1. முதலில் பிஎம் கிசானின் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் கொடுக்கப்பட்டுள்ள Farmers Corner என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Know Your Status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அங்கு பதிவு எண் மற்றும் செக்யூரிட்டி கோடு உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும்.
  4. இதனை செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
  5. அந்த ஓடிபியை பதிவு செய்து பிஎம் கிசான் பணம் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.3,040 சரிவை சந்தித்த தங்கம்.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி உங்களுக்கு பிஎம் கிசான் 23வது தவணை பணம் விடுவிக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us