இன்றுமுதல் 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
Heavy Rain Alert : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 18, 2026 இன்று விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 19, 2026 நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவளளூர், விழுப்புரம், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 18 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 18, 2026 இன்று விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 19, 2026 நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவளளூர், விழுப்புரம், மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்றுமுதல் 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 18, 2026 இன்று செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!




தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (ஆக.18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஆகஸ்ட் 19. 2026 நாளை மறுநாள் நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20, 2026 முதல் ஆகஸ்ட் 23, 2026 வரை 4 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : காவிரி நீர் விவகாரம்… கர்நாடக மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆகஸ்ட் 18, 2026 இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆகஸ்ட் 18, 2026 இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்பிபிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலையை பொறுத்தவரை ஆகஸ்ட் 18, 2026 இன்று முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை தமிழகத்தின் உள் பகுதிகளின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.