பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. வீட்டில் இருந்தே சுலபமாக செய்யலாம்!
Apply For PVC Aadhaar Card | இந்திய குடிமக்களுக்கு ஆதார் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் இல்லை என்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்தே பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ளது தான் ஆதார் கார்டு (Aadhaar Card). ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல், வங்கியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. சில இடங்களுக்கு செல்லும்போது ஒருவர் இந்திய குடிமகன் தானா என்பதை சோதிக்கவும், 18 வயதை தாண்டியர் தானா என்பதை சோதிக்கவும் ஆதார் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு பல இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய முக்கிய ஆவணமாக அதார் கார்டு எளிதில் கிழிந்துவிடாமல் இருக்க தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) பிவிசி ஆதார் கார்டுகளை (PVC Aadhaar Card) அறிமுகம் செய்தது.
இந்த வகை ஆதார் கார்டுகள் ஏடிஎம் கார்டுகளை போல உறுதியானதாக இருக்கும். இவற்றை பல வருடங்கள் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் பயன்படுத்தலாம். இந்த நிலையில், பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஆதார் சர்வீஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் உங்களது ஆதார் எண் மற்றும் அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவிட்டு அவற்றுடன் கேப்ட்சாவையும் பதிவிட வேண்டும்.
- தற்போது ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபியை உள்ளிட வேண்டும்.
- பிறகு உங்களிடம் எது உள்ளதோ கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் உள்ளிட்ட ஏதேனும் ஒரு டிஜிட்டல் கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும். பிறகு பிவிசி ஆதார் கார்டு விண்ணப்பிப்பதற்காக கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!




மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றி மிக எளிதாக நீங்கள் பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 5 முதல் 7 நாட்களுக்குள்ளாக உங்களது வீடு தேடி பிவிசி ஆதார் கார்டு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.