AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!

Make Sure These Things Before Filing ITR | வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல்களை இந்திய வருமான வரித்துறை திறந்துள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Jun 2026 15:15 PM IST

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்த வகையில், 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் தொடங்கியுள்ளது. அதற்காக இந்திய வருமான வரித்துறை போர்டல்களை திறந்துள்ளது. எனவே, வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள் அதற்கான பணிகளை தொடங்கலாம். அனால், வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த ஒரு விஷயத்தை செய்ய மறக்க கூடாது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி தாக்கல் – போர்டல்களை திறந்த வருமான வரித்துறை

இந்தியாவில் ஒவ்வொரு நிதியாண்டும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியாமாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 வழங்கிவிட்டன. இதனை தொடர்ந்து வருமான வரித்துறையும், ஐடிஆர் – 1, ஐடிஆர் – 2 மற்றும் ஐடிஆர் – 4 தாக்கல் செய்வதற்கான போர்டல்களை திறந்துள்ளது.

இதையும் படிங்க : EPFO சர்வர்கள் மூன்று நாட்கள் செயல்படாதா?.. வெளியான முக்கிய தகவல்!

ஃபார்ம் 16-ஐ ஒப்பிட்டு பார்க்க வேண்டியது அவசியம்

வருமான வரி தாக்கல் செய்யும்போது எந்தவித தவறும் நடக்காமல் இருக்க ஃபார்ம் 16-ஐ வருடாந்திர தகவல் அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது மிகவும் அவசியம் என கூறப்பட்டுகிறது. அதாவது, ஒருவர் தான் செய்த பெரிய அளவிலான பண பரிவர்த்தனை மற்றும் சேமிப்பு கணக்கு வட்டி விவரங்களை வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS – Taxpayer Information Summary) மூலம் எளிதாக தெரிந்துக்கொள்ள முடியும்.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!

இதேபோல பிடித்தம் செய்யப்பட்ட வரி அனைத்தும் கணக்கில் சரியாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஃபார்ம் 26AS மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை இந்த டிஜிட்டல் அறிக்கைகளில் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில், நோட்டீஸ் வருவதற்கோ அல்லது நீஃபண்ட் கிடைப்பதற்கோ தாமதம் ஏற்படும். எனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த சில விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

Follow Us