கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
July Month Changes | ஒவ்வொரு மாதத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2026, ஜூலை மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன மாற்றங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம், பெட்ரோல், டீசல் விலை மாற்றம், ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். 2026, ஜூன் மாதம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜூலை மாதத்தில் என்ன என்ன முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜுலை மாதம் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் 2026, ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், ஜூலை 01, 2026 அன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.
இதையும் படிங்க : பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
ஆதார் மின்னஞ்சல் முகவரி
ஆதார் கார்டில் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்க வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகவும், இலவசமாக மின்னஞ்சல் புதுப்பிக்கும் சேவை ஜூலை 01, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
கிரெடிட் கார்டு சலுகை விதிமுறைகள்
ஜூலை முதல் கிரெடிட் கார்டுகளுக்கான சலுகை விதிமுறைகள் மாற்றப்படுகின்றன. அதாவது, குறிப்பிட்ட அளவு செலவினை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கே சில சிறப்பு பயண வசதிகள் கிடைக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் இதனை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த முக்கிய மாற்றங்கள் ஜூலை 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. எனவே பொதுமக்கள் அவற்றை குறித்து தெரிந்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



