AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Lowest Interest Rates For Education Loan | வங்கிகள் பல்வேறு வகையான கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் அவற்றின் பட்டியல் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Jun 2026 19:45 PM IST

இந்தியாவில் உள்ள வங்கிகள் பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பாக நிர்வகிப்பது மட்டுமன்றி, கடன் உதவிகளையும் வழங்குகிறது. தனிநபர் கடன் (Personal Loan), வீட்டு கடன் (Home Loan), தொழில் கடன் (Business Loan) உள்ளிட்ட பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் எந்த எந்த வங்கிகளில் கல்வி கடனுக்கு குறைந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கல்வி கடனுக்கு குறைவான வட்டி வழங்கும் வங்கிகள்

இந்தியாவில் உள்ள வங்கிகள் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்றன. மாணவர்கள் படிப்பை முடித்தபிறகு அந்த கடனை திருப்பி செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

பொதுத்துறை வங்கிகள்

வ.எண்  வங்கிகள்  வட்டி விகிதம் 
1 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 8.90 சதவீதம்
2 பஞ்சாப் நேஷனல் வங்கி 8.10 சதவீதம்
3 கனரா பேங்க் 9.25 சதவீதம்
4 யூனியன் பேங்க் 9.25 சதவீதம்
5 பேங்க் ஆஃப் பரோடா 10.25 சதவீதம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பொதுத்துறை வங்கிகள் கல்வி கடனுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இதையும் படிங்க : பிஎம் கிசான் 23வது தவணை.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

தனியார் துறை வங்கிகள்

வ.எண்  வங்கிகள்  வட்டி விகிதம் 
1 ஐசிஐசிஐ வங்கி 9 சதவீதம்
2 ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி 9.50 சதவீதம்
3 ஐடிபிஐ வங்கி 9.90 சதவீதம்
4 ஆக்சிஸ் பேங்க் 10.81 சதவீதம்
5 எச்டிஎஃப்சி வங்கி 12.50 சதவீதம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த தனியார் வங்கிகள் கல்வி கடனுக்கு குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகின்றன.

இதையும் படிங்க : வெறும் 4% வட்டி.. பிணையம் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன்.. விவசாயிகளுக்கான அசத்தல் திட்டம்!

குறைந்த வட்டி கடனை தேர்வு செய்வது எப்படி?

அதிக வட்டியில் கடனை வாங்கும்போது அதிக தொகையை திருப்பி செலுத்த வேண்டும். இதுவே குறைந்த வட்டியில் கடன் வாங்கும்போது மிக விரைவாக கடனை அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us