பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Did Not Get PM Kisan 23rd Installment Yet | பிஎம் கிசான் யோனதா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஜூன் 20, 2026 அன்று 23வது தவணை பணம் வரவு வைக்கப்பட்டது. இருப்பினும் சில விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது.
இந்தியாவில் ஏழை, எளிய விவசாயிகளுக்கான வரப்பிரசாதமான திட்டமாக பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana) திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.6,000 வரவு வைக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 23 தவணைகள் பணம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜூன் 20, 2026 அன்று தான் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2,000 வரவு வைகக்கப்பட்டது. இருப்பினும் சில விவசாயிகளுக்கு பணம் கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில், பணம் வராத விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூன் 20, 2026 அன்று வரவு வைக்கப்பட்ட ரூ.2,000
பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் ஜூன் 20, 2026 அன்று பணம் வரவு வைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் இருந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்தார். அன்றைய தினம் சுமார் 9.44 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் மொத்தமாக ரூ.18,880 கோடி வரவு வைக்கப்பட்டது. ஆனால், சிலருக்கு இன்னும் பிஎம் கிசான் பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அவ்வாறு பணம் வராதவர்கள் அது குறித்து கவலைப்பட வேண்டாம்.




இதையும் படிங்க : உங்கள் பான் கார்டு மோசடிக்கு உள்ளாகலாம்.. இதனை கட்டாயம் செய்யுங்கள்!
இந்த விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்
நீங்கள் செய்த சில தவறுகள் காரணமாக உங்களுக்கு பிஎம் கிசான் 23வது தவணை வரவு வைக்கப்படாமல் இருக்கலாம்.
தவறான வங்கி கணக்கு விவரங்கள்
ஒருசிலர் தவறான வங்கி கணக்கு விவரங்களை வழங்கியிருப்பார்கள். அல்லது அவர்களது வங்கி கணக்கு செயலற்ற நிலையில் இருக்கும். இத்தகைய சூழலில் ரூ.2,000 பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, பிஎம் கிசான் இணையதளத்திற்கு சென்று நீங்கள் சரியான வங்கி கணக்கு விவரங்களை கொடுத்துள்ளீர்களா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன்னதாக இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!
இ கேஒய்சி சரிபார்ப்பு
பிஎம் கிசான் கணக்கில் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றாலும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்படும். இதற்காக விவசாயிகள் ஓடிபி அடிப்படையிலான கேஒய்சி செயல்முறையை மேற்கொள்ளலாம்.