AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!

Gold Price Increased Thrice Within 24 Hours | ஜூன் மாதம் முதல் கடும் சரிவை சந்தித்து வந்த தங்கம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை திடீர் உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Jun 2026 14:55 PM IST

2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) கடும் சரிவை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை தற்போது டிவிஸ்ட் அடித்துள்ளது. அதாவது, நேற்று (ஜூன் 26, 2026) முதல் இன்று (ஜூன் 27, 2026) வரை மொத்தம் மூன்று முறை தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த தங்கம் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திடீர் தங்கம் விலை உயர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிவிஸ்ட் அடித்த தங்கம் – திடீர் விலை உயர்வு

ஈரான் போர் (Iran War) காரணமாக கடந்த சில மாதங்களாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. அதாவது ஜுன் 20, 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் தங்கம் விலை 6 சதவீதம் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் தங்கம் விலை மேலும் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான், பொதுமக்களுக்கு தங்கம் ஷாக் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு

24 மணி நேரத்தில் மூன்று முறை உயர்வை சந்தித்த தங்கம்

சென்னையில் நேற்று (ஜூன் 26, 2026) காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்வை சந்தித்தது. அதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு மாலையில் தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்தித்தது. அதாவது நேற்று ஒரு நாள் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்வை சந்தித்தது.

இதையும் படிங்க : ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?

இன்று மீண்டும் உயர்வை சந்தித்த தங்கம்

தங்கம் இன்று (ஜூன் 27, 2026) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us