AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?

Three Days Continuous Holidays For Banks | வங்கிகளுக்கு சில காரணங்களால் சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், மொகரம் பண்டிகை காரணமாக ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jun 2026 15:10 PM IST

பண்டிகைகள், அரசு விழாக்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வங்கிகளுக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை மூன்று நாட்கள் விடுமுறை

மொஹரம் பண்டிகை காரணமாக வங்கிகள் ஜூன் 25 அன்று மூடப்படுமா அல்லது ஜூன் 26 அன்று மூடப்படும என்ற குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI – Reserve Bank Of India) விடுமுறை பட்டியலின்படி, ஜூன் 26, 2026 அன்று தான் மொஹரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஜூன் 26 அன்று விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!

தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது

ஜூன் 26, 2026 அன்று மொஹரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை அளிக்கப்படும். காரணம், ஜூன் 27, 2026 மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனை தொடர்ந்து ஜூன் 28, 2026 ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிகப்படும். இதன் காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இதையும் படிங்க : பிஎம் கிசான் பணம் ரூ.2,000 இன்னும் வரவில்லையா?.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

பிற சேவைகளை தடையின்றி பெறலாம்

வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஏடிஎம் (ATM – Automated Teller Machine), யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள், வங்கிகளின் செயலிகள் ஆகியவை வழக்கம் போல பயன்பாட்டில் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் அந்த சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us