வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?
These 9 Should Pay Income Tax In India | இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமன்றி, இந்த 9 பேர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமான பெறும் நபர்கள் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லும் நபர்கள் மற்றும் தொழில் செய்யும் நபர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. வேலைக்கு செல்லும் நபர்கள் மட்டுமன்றி, இந்த 9 பேரும் வருமான வரி செலுத்த வேண்டும். இந்த நிலையில், இது குறித்து வருமான வரி விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த 9 பேரும் வருமான வரி செலுத்த வேண்டும்
வெளிநாட்டு சொத்துக்கள்
நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து வெளிநாட்டில் ஏதேனும் சொத்து வைத்திருந்தால், அந்த வெளிநாட்டு சொத்தில் இருந்து பயன்பெற்று வந்தால், வெளிநாட்டு வங்கி கணக்கில் கையெழுத்திடும் அதிகாரம் வைத்திருந்தால் நீங்கள் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
அதிக வெளிநாட்டு பயண செலவு
நீங்கள் ஒரு நிதியாண்டில் வெளிநாட்டு பயணத்திற்காக உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நீங்கள் ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டும்.




அதிக டிடிஎஸ் பிடித்தம்
உங்கள் பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டினால் அந்த நபர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
- சாதாரண நபர் : ரூ.25,000
- மூத்த குடிமக்கள் : ரூ.50,000
இதையும் படிங்க : வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!
சேமிப்பு கணக்கில் அதிக தொகை இருப்பு
ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்குகளில் சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணம் இருப்பு வைத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
நடப்பு கணக்கில் அதிக வைப்பு
வங்கிகளில் வழங்கப்படும் Current Account-ல் ரூ.1 கோடிக்கு மேல் பணம் வைத்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அந்த நபரின் வருமானம் குறைவாகவே இருந்தாலும் அவர் இத்தகைய சூழலில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
வணிக வருவாய்
நீங்கள் ஒரு தொழில் செய்பவராக இருந்து, உங்களது ஆண்டு வருமானம் ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 வரை இழப்பீடு – இந்திய ரிசர்வ் வங்கி முடிவு
தொழில்முறை வருமானம்
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப ஆலோசகர்கள், ஃப்ரீலான்ஸர்கள் போன்ற தொழில் முறையினராக இருந்தால் உங்களது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயம்.
அதிக மின்சார கட்டணம்
ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் மின்சார கட்டணம் செலுத்துகிறார் என்றால் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டும்.
அடிப்படை வரி விலக்கு வரம்பை தாண்டுதல்
ஒருவருடைய மொத்த வருமானம் எந்த ஒரு முதலீட்டு விலக்குகளையும், அதாவது 80சி, 80டி போன்றவற்றை கழிப்பதற்கு முன்பு அரசாங்கள் நிர்ணயித்துள்ள அடிப்படை வரி விலக்கு வரம்பிற்கு மேல் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் கீழ் வரும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியம் என்பது குறிப்பிடத்தகது.