AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!

Deregulation of Commercial Gas Cylinders | ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய வணிக கேஸ் சிலிண்டர்கள் மீது மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த நிலையில், தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்துள்ளதால் அந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2026 13:04 PM IST

அமெரிக்கா மற்றும் ஈரான் (America and Iran) இடையே உருவான போர் காரணமாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது. இதன் காரணமாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல முடியாத சூழல் உருவான நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட சில உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்க்கொண்ட நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதிலும் குறிப்பாக வணிக சிலிண்டர்களுக்கான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வணிக சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.

வணிக கேஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தொழில் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி விநியோகத்தின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. மேற்கு ஆசியா நெருக்கடிக்கு முன்பாக இருந்த நிலைக்கு விநியோகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெருக்கடியின் தொடக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்த எல்பிஜி விநியோகமும் நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவுகளில் 50 சதவீதத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

வணிக சிலிண்டர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் என்ன என்ன?

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், வணிக கேஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்திம் வைக்கப்பட்டது. அதன் பிறகு 20 சதவீதம், 50 சதவீதம் என படிப்படியாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் மீண்டும்  இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் ரூ.1,680 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த கடும் போர் மூன்று மாதங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சிக்கல்கள் முடிவு பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதன் காரணமாக மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us