Gold Price : ஒரே நாளில் ரூ.1,680 சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Reduced 1,680 Rupees Per Sovereign | ஜுன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 25 : ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 25, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது இன்றைய தினம் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்து வரும் தங்கம்
ஈரான் போர் (Iran War) காரணமாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் தங்கம் விலை 6 சதவீதம் சரிவை சந்தித்தது. அதாவது 10 நாட்களுக்கு தலா 3 சதவீதம் வரை சரிந்தது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஜூன் மாதம் முடிவடைவதற்குள் தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
ஒரே நாளில் ரூ.1,680 குறைந்த தங்கம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கும், சவரனுக்கு ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.