AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SIP-ல் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்க முடியுமா?

500 SIP Investment To Build 50 Lakh Rupees | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் எஸ்ஐபி திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், எஸ்ஐபி திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

SIP-ல் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்க முடியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2026 00:19 AM IST

விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை காரணமாக மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய பொருளாதார சிக்கல்களை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது எதிர்காலத்திற்காக சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும். இதற்காக பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், சமீப காலமகாம பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு திட்டம் தான் எஸ்.ஐ.பி இந்த நிலையில், எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Fund) திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்வதன் மூலம் எத்தனை ஆண்டுகளில் ரூ.50 லட்சம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் மாதம் ரூ.500 எஸ்ஐபி முதலீடு

தற்போதைய காலத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள முதலீட்டு திட்டம் தான் எஸ்ஐபி. இந்த திட்டத்தில் வெறும் ரூ.500 முதலே முதலீடு செய்ய முடியும். மாதம் ரூ.500 மட்டுமே முதலீடு செய்வதன் மூலம் ரூ.50 லட்சத்தை உருவாக்குவது சற்று சவாலானது. காரணம், அதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். நீங்கள் மாதம் ரூ.500 மட்டுமே எஸ்ஐபியில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது சராசரியாக 12 சதவீதம் லாபம் தரக்கூடிய திட்டமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஜூன் 26 முதல் 28 வரை.. தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?

ரூ.50 லட்சத்தை உருவாக்க 40 ஆண்டுகள் தேவைப்படும்

12 சதவீதம் லாபம் தரக்கூடிய ஒரு திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.500 முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.6,000 முதலீடு செய்வீர்கள். அந்த வகையில் ரூ.50 லட்சம் பணத்தை உருவாக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சுமார் 40 ஆண்டுகள் தேவைப்படும். இதுவே நீங்கள் குறுகிய காலத்தில் இலக்கை எட்ட வேண்டும் என்றால் ஸ்டெப் அப் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும்.

Follow Us