AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா.. செப்டம்பர் 1 தான் கடைசி.. அதக்குள்ள இத பண்ணிடுங்க!

Important Announcement For Post Office Savings Account Holders | கிராமப்புறங்களில் உள்ள அஞ்சலகங்கள் வங்கிகளை போலவே செயல்படுகின்றன. இதன் காரணமாக தான், மத்திய அரசு புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதனை பெறுவதற்கு செப்டம்பர் 01, 2026-க்குள் இதனை செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.

அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா.. செப்டம்பர் 1 தான் கடைசி.. அதக்குள்ள இத பண்ணிடுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Jun 2026 15:10 PM IST

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்யும்போதுதான் பொருளாதார பாதுகாப்பை உருவாக்க முடியும். அவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான், அஞ்சலங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது செப்டம்பர் 01, 2026-க்கு ஒரு முக்கிய வேலையை செய்து முடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அது என்ன வேலை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலகத்தில் கணக்கு இருக்கா – செப்டம்பர் 01 தான் கடைசி தேதி

அஞ்சல் துறை, கிராமப்புற வங்கி செயல்பாடுகளை சரிசெய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத வாடிக்கையாளர்கள் ட்ரீம் ஆப் மூலமாக அல்லது ஆதார் ஆத்தன்டிகேஷன் மூலமாக டெபாசிட் செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ அவர்களுடைய சேவைகள் பிளாக் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், வாடிக்கையாளர்கள் எந்த வித சிக்கல்களும் இன்றி பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும், அவ்வப்போது பரிவர்த்தனை தொடர்பான நோடிஃபிகேஷன்களை எஸ்எம்எஸ் மூலம் பெறுவதற்கு கட்டாயமாக மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது.

இதையும் படிங்க : SIP-ல் ரூ.500 முதலீடு செய்து ரூ.50 லட்சத்தை உருவாக்க முடியுமா?

அஞ்சலக சேவை தொடர்பாக அறிமுகமான புதிய அம்சம்

கிராமப்புற பகுதிகளில் தற்போதைய காலக்கட்டத்திலும் கூட அஞ்சலகங்களே முதன்மை வங்கியாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான், இந்திய பொதுமக்கள் எந்த அஞ்சலக கிளையின் மூலமாகவும் சேவையை பெற முடியும் என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஒருவர் எந்த கிளையில் கணக்கு வைத்திருந்தாரோ அந்த கிளைக்கு மட்டுமே சென்று பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி அதற்கான எந்த கட்டாயமும் இல்லை.

இதையும் படிங்க : ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!

இந்த புதிய அம்சத்தில் பயன்பெற ஆதார் அடிப்படையிலான இகேஒய்சி மற்றும் மொபைல் எண் இணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பட்சத்தில் இந்தியாவின் எந்த ஒரு கிளை அலுவலகத்தில் இருந்து வேண்டுமானாலும் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். செப்டம்பர் 01, 2026 முதல் அஞ்சலங்களின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாக மாறுவதன் காரணமாக, ஆதார் மற்றும் அஞ்சலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us