AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price Increased | 2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2026 11:20 AM IST

சென்னை, ஜுன் 26 : ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை (Gold Price) கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (ஜூன் 26, 2026) தங்கம் விலை சில நாட்களுக்கு பிறகு உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் மட்டுமன்றி, வெள்ளியும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூன் மாதம் தொடங்கியது முதலே சரிவை சந்திக்கும் தங்கம்

2026, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. பிப்ரவரி மாதம் முதல் ஈரான் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஜூன் மாதம் முதல் தொடர் சரிவையே சந்தித்து வருகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க : தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!

உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.235-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us