2026 ஜூலை மாதத்திற்கு தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வரிகள்.. என்ன என்ன?
3 Important ITR Deadlines In July 2026 | இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், 2026 ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வருமான வரிகள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் ஒரு நிதியாண்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதில் பல விதமான வரி முறைகள் அமலில் உள்ளது. அந்த வகையில் இந்தியர்கள், 2026 ஜூலை மாதம் தவற விடக்கூடாத மூன்று முக்கிய வரி தாக்கல்கள் உள்ளன. ஜூலை மாதம் பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், முன்கூட்டியே அதற்கான பணிகளை மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த நிலையில், அவை என்ன என்ன, அவற்றை தாக்கல் செய்வது ஏன் அவசியம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய 3 வரி டெட்லைன்ஸ்
இந்தியாவில் தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான சீசன் தொடங்கியுள்ளது. பலரும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மூன்று முக்கிய வரிகள் குறித்து பார்க்கலாம்.
ஜூலை 07, 2026
டிடிஎஸ் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவாக ஜூலை 07, 2026 உள்ளது. வருமான வரி சட்டம் 2025-ன் கீழ் ஒருசிலருக்கு காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கும். அவ்வாறு அனுமதி பெற்றவர்கள், ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் வரியை டெபாசிட் செய்வதற்கு ஜூன் 07, 2026 அன்று காலக்கெடுவாக உள்ளது.




இதையும் படிங்க : ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!
ஜூலை 30, 2026
ஜூலை மாதத்திற்கான முக்கியமான காலக்கெடுவாக ஜூலை 30,2026 உள்ளது. குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழ் 2026-ல் பிடித்தம் செய்த செல்லான் மற்றும் அறிக்கை விவரங்களை ஜூலை 30, 2026 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இதையும் படிங்க : வணிக கேஸ் சிலிண்டர்கள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு!
ஜூலை 31, 2026
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக உள்ளது தான் ஜூலை 31, 2026. 2026 முதல் 2027 மதிப்பீட்டாண்டின் வருமான வரி கணக்கை ஐடிஆர் 1, ஐடிஆர் 2 படிவங்களை பயன்படுத்தி வரி தாக்கல் செய்யும் தனி நபர்களுக்கான கடைசி தேதியாகவும் இது உள்ளது.
இந்திய குடிமக்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மூன்று வரி தாக்கல் காலக்கெடுக்களை கட்டாயம் உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.