இரண்டு மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. இத தெரிஞ்சுக்கோங்க!
Kisan Vikas Patra Scheme In Post Office | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலங்கள் மூலம் வழங்கும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்கள் தங்களுக்கான பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றால் அவர்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு அரசு அஞ்சலங்கள் மூலம் சில பாதுகாப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், முதலீட்டுக்கு இரண்டு மடங்கு லாபம் தரும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கேவிபி திட்டம்
அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம். இது ஒரு பத்திர திட்டம். அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை அவர்கள் பத்திரமாக வழங்கிவிடுவார்கள். இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தில் முதலீடு செய்து இரண்டு மடங்கு லாபத்தை பெற முடியும் என்பதுதான்.
இதையும் படிங்க : வாழ்க்கைத் துணை இறந்த பிறகு யார் வருமான வரி தாக்கல் செய்வது? விதிகள் சொல்வது என்ன?
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் – முதலீடு செய்வது எப்படி?
இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட திட்டமாகவும், 100 சதவீதம் உத்தரவாதமான வருமானத்தை தரும் திட்டமாகவும் உள்ளது. இதன் காரணமாக தான் இந்த திட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, பல பிரபல வங்கிகள் வழங்குவதை விட அஞ்சலங்கள் வழங்கும் இந்த கிசான் விகாஸ் திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க : யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!