AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!

TVK Alliance Partners Meeting : தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காது என்று அந்தக் கட்சிகளின் தலைமை தெரிவித்துள்ளது. இது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!
தவெக கூட்டணி கூட்டத்தை இடதுசாரிகள் புறக்கணிப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 30 Jun 2026 21:48 PM IST

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை அருகே உள்ள கோவளத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை புதன்கிழமை ( ஜூலை 1- ஆம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தவெக ஆலோசனை கூட்டத்தில் இடதுசாரிகள் பங்கேற்காது

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கவில்லை என்று அந்த கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்திக்க உள்ளனராம். அத்துடன் மக்கள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆகியோர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க: எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!

தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் புறக்கணிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்த இடதுசாரி கட்சிகள், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இதனால், இடதுசாரி கட்சிகள் தவெக கூட்டணியில் அங்கம் வகித்து வருவதாகவே அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி அமைக்கும் முடிவில் முதல்வர் விஜய் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

தவெகவினர் இடையே அதிர்ச்சி

இதன் காரணமாகவே, இடதுசாரி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை அந்த கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக வெற்றி கழகம் கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: அதிமுக துணை பொதுச்செயலர் பதவி வேண்டாம்.. எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போர்க்கொடி!

Follow Us