போக்குவரத்து துறையில் அரசு வேலை மோசடி.. குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் மாஜி அமைச்சர் சிவசங்கர்!
Transport Department Job Fraud Case : தமிழக போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த துறையின் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அரசு போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என கூறப்படும் இளஞ்செயன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளஞ்செழியனை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எழும்பூர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இளஞ்செழியனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதாவது ஜூலை 6- ஆம் தேதி வரை இளஞ்செழியன் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி சம்பவத்தில் ஒரு பகுதியாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்
அந்த சம்மனில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நாளை புதன்கிழமை (ஜூலை 1- ஆம் தேதி) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!




அரசு வேலை மோசடி சம்பவம்
போக்குவரத்து துறையில் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் என கூறப்பட்ட சீனிவாசன் என்பவரை அணுகியதாக தெரிகிறது. இதற்காக, பல்வேறு தவணையாக ரூ.23 லட்சத்தை சீனிவாசன் பெற்றுள்ளார். ஆனால், கூறியபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசன் சென்னை காவல் ஆணையகரத்தில் மோசடி புகாரை அளித்திருந்தார்.
மோசடி புகாரில் சிவசங்கருக்கு தொடர்பா
அந்த புகாரின் அடிப்படையில் இளஞ்செழியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், போக்குவரத்து துறையில் மோசடி நிகழ்ந்த போது அப்போதைய துறை அமைச்சராக இருந்த சிவசங்கருக்கு தொடர்பு இருக்குமா என்பதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!