AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!

Nellai Girls Harassment Case : திருநெல்வேலி மாவட்டத்தில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது .

நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!
போக்ஸோ வழக்கில் தூக்கு தண்டனை உறுதி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 30 Jun 2026 18:26 PM IST

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் ( 41 வயது). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவர், கடந்த 2023- ஆம் ஆண்டு அதே பகுதியில் சேர்ந்த முறையே 6, 7, 8 ஆகிய வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி வீட்டுக்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவத்தை வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமிகளை ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டி இருந்தார். இதனால், தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறாமல் அந்த சிறுமிகள் மறைத்துள்ளனர். ஆனால், சிறுமிகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்த காரணத்தால் அவர்களிடம் பெற்றோர் விசாரிக்கையில், மேற்கண்ட கொடூர சம்பவம் தெரியவந்தது.

தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த் சேகர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஆனந்த் சேகருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆவின் பாலில் இனி சலுகை கிடையாது.. லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி திடீரென ரத்து.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!

சிறுமிகளின் அடையாளத்தை நீக்க வேண்டும்

இது தொடர்பாக நீதிபதி தனது உத்தரவில், பாலியல் குற்றங்களுக்கு இரக்கம் காட்டுவது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். குழந்தைகளின் உணர்வுகளை மலிவாக கருதி, குற்றவாளி சிறையில் மீதி காலத்தை களிப்பதை நீதிமன்றம் விரும்பவில்லை. அத்துடன் நீதிமன்ற பதிவாளர் உத்தரவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் சம்பந்தப்பட்ட 3 குழந்தைகளின் அடையாளத்தை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணை நடைபெற்று வந்தது.

நெல்லை போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை

இதில், பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றம் விசாரித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த் சேகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்!

Follow Us