ஆவின் பாலில் இனி சலுகை கிடையாது.. லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி திடீரென ரத்து.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!
Aavin Milk Discount Withdrawn: கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஜூலை 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பார்க்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிர்வாகம், மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நபர்களுக்கு வழங்கி வரும் சிறப்பு சலுகையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி விலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த தள்ளுபடி சலுகை இனி இல்லை என்று கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 1- ஆம் தேதி ( புதன்கிழமை) முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சில்லரை விற்பனையின் மூலமே பால் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் மற்றும் நுகர்வோர்கள் பிரதி மாதம் 11- ஆம் தேதி முதல் 25- ஆம் தேதிக்குள் ஆவின் பிரத்யேக செல் போன் ஆப் வழியாக ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி, தங்களது மாதாந்திர பால அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அளித்த ஆவின் அறிவிப்பு
ஆவின் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு பால் நுகர்வோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் ஆவினின் உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் நிறுவனத்தின் தினசரி விநியோகம் தற்போது, 13.5 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. பால் கொள்முதல் குறைவு காரணமாக, விநியோகம் குறைந்ததாக ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக – விசிக கூட்டணி உடைகிறதா? தொல். திருமாவளவன் கொடுத்த சைலன்ட் ரிப்ளே!




ஆவின் நிர்வாகத்துக்கு ரூ.600 கோடி நிதி இழப்பு
இதன் காரணமாக ஆவின் நிர்வாகம் ரூ.600 கோடி நிதி இழப்பை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021- ஆம் ஆண்டு 40 முதல் 45 லட்சம் லிட்டராக இருந்த தினசரி பால் கொள்முதல், தற்போது சுமார் 28 லட்சம் லிட்டர் ஆக குறைந்துள்ளது. இது தேவைக்கும், விநியோகத்துக்கும் ஆன இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆவின் பால் விநியோகம் குறைப்பா
இந்த நிலையில், சென்னையில் ஆவின் பால் விநியோகம் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சென்னையில் ஆவின் பால் விநியோகம் குறைக்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விழுப்புரம் வாகன ஓட்டிகளே உஷார்.. 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு!