வேகமெடுக்கும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் சேவை திட்டம்.. வெளியான சூப்பர் அப்டேட்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!
Chennai Bullet Train Route: சென்னையில் இருந்து ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சேவைக்கான வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் முதல் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
நாட்டில் பொதுமக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத போக்குவரத்து சேவையில் ரயில் சேவையும் ஒன்றாக இருந்து வருகிறது. இதன் மூலம் குறைந்த கட்டணத்தில் படுக்கை வசதியுடன் பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ரயில் பயணத்திற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நாட்டில் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதே போல, அம்ரித் பாரத் ரயில் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்கள் சேவையில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு ரயில்களும் குறைந்த நேரத்தில் பயணிகள் விரும்பும் இடங்களுக்கு சென்றடையும் வகையில் அதிவேக சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புல்லட் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, புல்லட் ரயில் சேவைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புல்லட் ரயில் பாதையில் முதல் கட்ட பணிகள்
இதில், ஹைதராபாத்தில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு இடையே புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடங்கள் அமைப்பதற்காக திட்டங்கள் முன்மொழியபட்டிருந்தன. இந்த நிலையில், இந்த ரயில் சேவைகளுக்காக முன்மொழியப்பட்ட வழித்தடங்களில் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் வழித்தடத்தை அமைப்பதற்காக களப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ரங்கா ரெட்டியில் இருந்து நல்கொண்டா மற்றும் விகாராபாத் மாவட்டங்கள் நோக்கிய பாதையை அளவீடு செய்து அதற்கான குறியீடுகளை ரயில்வே ஊழியர்கள் அமைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: போராட்டத்திற்கு அனுமதி கிடையாது.. திமுகவை அலறவிட்ட காவல்துறை.. சென்னையில் திடீர் பரபரப்பு!!




எந்த ஊர் வழியாக புல்லட் ரயில் சேவை
அதன்படி, ஹைதராபாத்- சென்னை வழித்தடமானது, ஷம்ஷாபாத் மகேஸ்வரம், கண்டுகூர், யச்சாரம் மண்டலங்கள் வழியாக நல்கொண்டா மாவட்டத்தின் நம்பள்ளி மண்டலம் வரை அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதில், முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு, அதன் பின்னர் வழித்தடம் முடிவு செய்யப்படுகிறது. இதன் பிறகு புல்லட் ரயிலுக்கான ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து சுமார் 3 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்ல முடியும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிவே வந்தேபாரத் ரயிலை தொடர்ந்து புல்லட் ரயில் சேவை
தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 7 முதல் 8 மணி நேரத்தில் குறிப்பிட்ட இடங்களை சென்றடைகின்றனர். சாதாரண ரயில்களின் 10 முதல் 12 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடங்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் முன்னதாக செல்லும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, இதைவிட வேகமாக இயங்கும் புல்லட் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க: யூடியூப்பை நம்பிய வீட்டுப் பிரசவம் விபரீதம்… திருப்பூரில் இளம்பெண் உயிரிழப்பு!