AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக ஆட்சி கவிழும்.. மு.க.ஸ்டாலின் உயரத்துக்கு இந்த கருத்து ஏற்புடையது அல்ல.. இந்திய கம்யூ. மு. வீரபாண்டியன்!

CPI Veerapandian condemned MK Stalin: தமிழக வெற்றிக் கழக அரசு ஒரிரு மாதங்களில் கவிழும் என்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து அவரது உயரத்துக்கு அழகு அல்ல என்று இந்திய கம்யூனிஸ் மாநில செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

தவெக ஆட்சி கவிழும்.. மு.க.ஸ்டாலின் உயரத்துக்கு இந்த கருத்து ஏற்புடையது அல்ல.. இந்திய கம்யூ. மு. வீரபாண்டியன்!
வீரபாண்டியன் முக ஸ்டாலின்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Jun 2026 20:33 PM IST

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்றிருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக அளவு ஆதரவு உள்ளது. தற்போது கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களை திரட்டும் அளவுக்கு சக்தி உள்ளது. ஜனநாயகத்துக்காகவும், நாட்டு நலனுக்காகவும், தமிழ் மண்ணின் உரிமைகளுக்காகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் ஜனநாயக சக்திகள் உடன் சேர்ந்து களம் ஆட முடியும். தனித்தும் களம் ஆட முடியும். தமிழகத்தில், ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரும். தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஜனநாயகத்தில் ஸ்டாலின் கருத்து ஏற்புடையது அல்ல

அதற்கு, மு. க. ஸ்டாலின் தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மிகவும் பழுத்த அரசியல் தலைவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி போன்ற தலைசிறந்த அரசியல் தலைவரிடம் அரசியல் கற்றவர். எனவே, ஜனநாயகத்தில் அவர் தெரிவித்தது போன்ற கருத்துகள் ஏற்புடையது கிடையாது. தற்போது தான், தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. தமிழக மக்கள் அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

மேலும் படிக்க: திமுக – விசிக கூட்டணி உடைகிறதா? தொல். திருமாவளவன் கொடுத்த சைலன்ட் ரிப்ளே!

மு.க.ஸ்டாலின் உயரத்துக்கு பொருத்தமானது அல்ல

எனவே, தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை நாம் வழிமொழிய வேண்டும். தமிழகத்தின் மிகப்பெரிய ஜனநாயக கட்சியின் தலைவர் என்ற முறையில் மு. க. ஸ்டாலினும், ஜனநாயகத்தின் வழி நின்று சட்டப்படி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்லி இருக்க வேண்டும். எனவே, இத்தகைய கருத்துக்கள் அவரது உயரத்துக்கு பொருத்தமானது அல்ல என்று தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழக கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழா நடைபெற்று இருந்தது.

மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து சர்ச்சை

இந்த நிகழ்வில் பங்கேற்ற கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் தமிழகத்தின் தற்போதைய அரசியல் குறித்து பேசி இருந்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஓரிரு மாதங்களில் கவிழ்ந்து விடும். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மீண்டும் நடக்கும். இதற்கு திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தான் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் விமர்சனம் வைத்துள்ளார்.

மேலும் படிக்க: விழுப்புரம் வாகன ஓட்டிகளே உஷார்.. 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு!

Follow Us