அதிவேகமாக வந்த இரு பைக்.. கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபத்து.. அடுத்தடுத்து பறிபோன இரு உயிர்கள்!
Nellai Bike Accident: திருநெல்வேலி மாவட்டத்தில் அதிவேகமா வந்க இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரு இளைஞர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் சந்துரு ( 25 வயது). இவர், இதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான லட்சுமணன் ( 20 வயது) என்பவருடன் தனது இரு சக்கர வாகனத்தில் சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதே சாலையில், கோபால சமுத்திரத்தை சேர்ந்த மகேஷ் ( 27 வயது) அவரது நண்பர் அந்தோணி ராஜ் ( 20 வயது) ஆகியோர் பைக்கில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரு பைக்குகளும் அதிவேகமாக வந்த காரணத்தால் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பத்தமடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலத்த காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து இரு பலி
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மகேஷ் மற்றும் சந்துரு ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அடுத்தடுத்து உயிரிழந்தனர். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிறைய இருப்பதாக கூறி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, லட்சுமணன் மற்றும் அந்தோணி ராஜ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த, மகேஷ் மற்றும் சந்துரு ஆகியோரின் சடலங்கள் உடல் கூறாய்வு செய்வதற்காக இதய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேற்கு தொடர்ச்சி மற்றும் தென் மாவட்டங்களில் தொடரும் கனமழை.. சென்னைக்கு மழை இருக்குமா?




பத்தமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.
குடும்பத்தினர்கள் மத்தியில் பெரும் சோகம்
அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டும் இன்றி கிராமத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்: