MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "மற்றொரு நாள்... மற்றுமொரு ராஜினாமா. சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர். விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 29, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தாலும், அரசியல் பரபரப்பு இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு எக்ஸ்ட்ரீம் ஆகியுள்ளது என்பதையே இந்த அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாக்கள் காட்டுகின்றன” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா:
அதிமுகவில் ஏற்கனவே ஐந்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது ஆறாவது நபராக கரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார்.
அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சிப் பிரச்சினைகள் நீடித்து வரும் சூழலில், எம்எல்ஏக்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளும் நிலவி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் ஓரணியாக இணைந்து தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த சில மணி நேரங்களிலேயே சபாநாயகர் அதனை ஏற்றுக்கொண்டார். தற்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இதற்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து எம்.எல்.ஏக்களை பர்சேஸ் செய்யும் த.வெ.க:
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க…
— Udhay (@Udhaystalin) June 29, 2026
இந்தச் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “மற்றொரு நாள்… மற்றுமொரு ராஜினாமா. சோஃபா மாடல் ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர். விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு எக்ஸ்ட்ரீம் ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்எல்ஏக்களை பர்சேஸ் செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்.
‘தொட மாட்டேன் – தொட்டா விட மாட்டேன்’ என்று ஸ்கிரிப்ட்-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த சீனில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தனது கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?சோஃபா மாடல் அரசின் இந்த வாஷிங் மெஷின் அரசியலை தமிழ்நாடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என தெரிவித்துள்ளார்.