AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக – விசிக கூட்டணி உடைகிறதா? தொல். திருமாவளவன் கொடுத்த சைலன்ட் ரிப்ளே!

Thol Thirumavalavan : தி்ராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற உள்ளதா என்ற கேள்விக்கு அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அளித்த பதிலை இந்தப் பதிவில் பார்க்கலாம். இடைத்தேரதலில் போட்டியிடுவது குறித்தும் பதிலளித்துள்ளார் .

திமுக – விசிக கூட்டணி உடைகிறதா? தொல். திருமாவளவன் கொடுத்த சைலன்ட் ரிப்ளே!
மு.க.ஸ்டாலின் - திருமாவளவன்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Jun 2026 18:56 PM IST

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சிகளாக விலகி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்து வருகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் போட்டியிட போவது கிடையாது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படி எந்த ஒரு அழுத்தத்தையும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுக்கவில்லை. இதனை, நான் முதல் நாளிலேயே கூறிவிட்டேன். ஊடகங்கள் யூகங்களாக இதனை பரப்பி வருகின்றனர். என்று தெரிவித்தார். மேலும், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நேரில் பார்க்க செல்வது அவசியமானதாகும்.

அமைச்சர் போதைப்பொருள் விவகாரத்தில் நடவடிக்கை

தமிழக அமைச்சரவையில் இலாகாவை மாற்றி தருமாறு என்றும் நாங்கள் கேட்கவில்லை. ஊடகங்கள் பரப்புகிற யூகங்களாகவே இவை உள்ளன. தமிழக வெற்றி கழகத்தின் மனித வளம் மற்றும் மேலாண்மை, முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது பற்றி கேட்கிறீர்கள். அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: அரசியல் தலையீடு இன்றி காவல்துறை செயல்படலாம்.. முதல்வர் ஜோசப் விஜய்!

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலக இருப்பதாக செய்திகள் வெளியானது பற்றி கேள்வி எழுப்பிய போது, அதற்கு திருமாவளவன் பதில் கூற மறுத்து விட்டார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விலகி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகியவை அடுத்தடுத்து விலகி தவெக கூட்டணியில் இணைந்துள்ளது.

தவெக கூட்டணியில் ஐக்கியமாகும் கட்சிகள்

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஆகியவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணையும் என்று பேச்சு எழுந்தது. இது தொடர்பாக, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளிக்காமல் திருமாவளவன் சென்றுள்ளார்.

மேலும் படிக்க: வேகமெடுக்கும் சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் சேவை திட்டம்.. வெளியான சூப்பர் அப்டேட்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

Follow Us