AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?

PM Asked People To Cut Down Oil Usage | மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியா பல்வேறு இறக்குமதி சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடம் சமையல் எண்ணெயைன் குறைவாக பயன்படுத்த கூறியுள்ளார்.

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 May 2026 21:57 PM IST

சமையலுக்கு பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) கூறியுள்ளார். இது தவிர தங்கம் வாங்க வேண்டாம் என்பது உள்ளிட்ட சில அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார். இந்த நிலையில், தாவர எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளது ஏன், தாவர எண்ணெய்க்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாவர எண்ணெய்களை பயன்படுத்த வேண்டாம் – பிரதமர் மோடி

2025 – 2026 காலக்கட்டத்தில் இந்தியா 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தாவர எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இந்திய மக்கள் தங்களது சமையல் அறையில் தினசரி பயன்படுத்தும் பொருளை இந்தியா மிகப்பெரிய அந்நிய செலவாணியை சாந்துள்ளது. இந்த செலவை குறைப்பது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க நேரடியாக உதவி செய்யும். இது குறைக்கப்படும் பட்சத்தில் இந்திய ரூபாய் மீதான அழுத்தம் குறையும்.

இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயனர் இறந்துவிட்டால் கடனை யார் செலுத்த வேண்டும்?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்திய பிரதமர் தனது உரைகளில் பல்வேறு முறை குறைவாக எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை அறிவுறுத்தி வருகிறார். இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி மீண்டும் அத்தகைய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக சிக்கலை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுக்கும் அரசு

தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசியா போர் காரணமாக சர்வதேச சக்தி மற்றும் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், தவிர்க்கக்கூடிய இறக்குமதிகளை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தவிர்க்க கூடிய இறக்குமதியில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் எண்ணெயும் ஒன்றாகும்.

இதையும் படிங்க : ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!

சமையல் எண்ணெய்க்கு மாற்று என்ன?

சமையல் எண்ணெயை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால், அதனை பயன்படுத்தும் விதத்தை மாற்றும்போது நிச்சயம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். உதாரணமாக சமையல் எண்ணெயை வறுத்தல், பொறித்தல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தாமல் இருக்கலாம். பெரும்பாலும் வேக வைத்த உணவுகளை சிறிது அளவு எண்ணெய் கலந்து சமையல் செய்யலாம். இவ்வாறு சமையல் முறையில் மேற்கொள்ளும் சிறிய மாற்றங்கள் சமையல் எண்ணெயின் தேவையை சற்று குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us