AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!

Name Removal In Ration Card | ரேஷன் அட்டையில் ஒருவரது பெயரை இணைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பெயரை நீக்கம் செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 May 2026 15:16 PM IST

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய திட்டம் தான் ரேஷன் அட்டை (Ration Card) திட்டம். இந்த திட்டத்தின் மூலம் வருமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் மாநிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கிய அம்சமாக இந்த ரேஷன் அட்டை உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் இது குறித்து கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

ரேஷன் அட்டை குறித்து அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரேஷன் அட்டை குறித்து அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்கம் செய்வதற்கு இனி மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த விதிமுறை மாற்றத்தின் மூலம், பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் எப்போது பெயர்களை நீக்கினாலும் மாத இறுதியில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்

ரேஷன் அட்டையில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரும் இடம்பெற்று இருக்கும். ஒருவேளை அந்த குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டியது முக்கியாமக உள்ளது. இந்த நிலையில், தான் அது குறித்து அரசு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : எஃப்டி திட்டத்தில் அதிக லாபம் பெற வேண்டுமா?.. அப்போ இப்படி முதலீடு செய்யுங்கள்!

அரசின் இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் இனி புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us