இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. UPI-ல் மாறிய ரூல்ஸ்.. புதிய விதிகள் கூறுவது என்ன?
UPI New Rules For Money Transaction | மனிதர்களின் வாழ்வில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா மிக வேகமாக நகர்ந்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக பண பரிவர்த்தனையை மிக எளிதானதாகவும், விரைவானதாகவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலில் உள்ளது. இதற்காக தான் யுபிஐ (UPI – Unified Payment Interface) சேவையை அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே யுபிஐயில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், அரசு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation Of India) யுபிஐ-ல் புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
யுபிஐ-ல் வந்த முக்கிய மாற்றம்
தற்போதைய நிலவரப்படி யுபிஐ வழியாக மேற்கொள்ளப்படும் தினசரி பண பரிமாற்றங்களுக்கான வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது. இந்த நிலையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், அரசு பண பரிவர்த்தனைகளுக்கான விதிவிலக்கை உருவாக்கியுள்ளது. அதாவது, வரி செலுத்தும் நபர்கள் வருமான வரி மற்றும் பிற அரசு நிலுவைகளுக்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா?




ரூ.1 லட்சம் என்ற உட்ச வரம்பு உடைக்கப்பட்டுள்ளது
புதுப்பிக்கப்பட்ட 2026 வழிகாட்டுதல்களின்படி, வருமான வரித்துறை உப்டப அரசு துறையில் உள்ள சரிப்பார்க்கப்பட்ட வணிகர்கள், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் என்ற உயர்த்தப்பட்ட வரம்புக்கு தகுதி உடையவர்களாக மாறுகின்றனர். இது பயனர்கள் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பீக் கீழ் செயல்படும் யுபிஐ செயலிகள் கணிசமான வரிப்பொறுப்புகளை உடனடியாக செலுத்த அனுமதின் வழங்குகிறது.
இதையும் படிங்க : தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!
அனைவரலாலும் இதனை செய்ய முடியுமா?
என்சிபிஐ அதிக வரம்பை அனுமதித்தாலும், உங்கள் பணப்பரிவர்த்தனையின் வெற்றி பெற்றாலும் உங்கள் தனிப்பட்ட வங்கியை பொருத்தது ஆகும். சில கடன் வழங்கும் வங்கிகள் மோசடியை தடுப்பதற்காக இன்னும் வரம்புகள் பின்பற்றப்படுகின்றன.