AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?

Gold Coin Sale Stopped | முதலீட்டு நோக்கத்திற்காக மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யும் நபர்கள் தங்க நாணயங்களில் முதலீடு செய்வர். இந்த நிலையில், மேற்கு ஆசிய போர் காரணமாக தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவதாக தமிழ்நாடு ஜீவல்லர்ஸ் சம்மேளனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தங்க நாணய விற்பனை நிறுத்தம்.. தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் சம்மேளம் முக்கிய முடிவு.. காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 May 2026 16:50 PM IST

தங்க நாணய (Gold Coin) விற்பனையை நிறுத்துவதாக தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்தயர்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) கூறியுள்ள நிலையில், அதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்க நாணய விற்பனையை நிறுத்துவதாக சம்மேளனம் அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் – பொதுமக்களுக்கு அரசு அறிவுரை

மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக உலக நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை நம்பியுள்ள நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பான சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், அந்நிய செலாவணியை குறைக்க பிரதமர் மோடி பொதுமக்களுக்கு தங்கம் வாங்க வேண்டாம், வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?

தங்க நாணய விற்பனை நிறுத்தம் – ஜூவல்லர்ஸ் சம்மேளனம் அறிவிப்பு

இந்த நிலையில், 85 நகைக்கடைகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு ஜூவல்லர்ஸ் சம்மேளன தலைவர் சபரிநாதன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அந்நிய செலாவணியை பாதுகாக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குறியது. அதற்காக, தங்கம் போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?

இது 2027 மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கிறோம். அரசின் நடவடிக்கை ஆதரவு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தின் நகைக்கடை உரிமையாளர்கள், தங்க நாணயம் விற்பனையை உடனடியாக நிறுத்துகிறோம் என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தங்க தொழிலை சார்ந்து வாழும் நபர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தங்கத்தை உலோக வடிவிலேயே வாங்கி சேமிக்கும் தங்க ஈடிஎஃப் மற்றும் டிஜி கோல்டு ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us