அதிக வட்டி வழங்கும் அரசின் முதலீட்டு திட்டங்கள்.. யோசிச்சு முதலீடு செய்யுங்க!
High Interest Government Schemes | அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்கள் மத்தியில் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) குறித்த தெளிவும், அறிவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்து உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த நிலையில், பணத்தை வளர்ச்சியடைய உதவி செய்யும் அரசின் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் அரசு செமிப்பு திட்டங்கள்
அரசு பல்வேறு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அதிக வட்டி கொண்ட திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்
பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த திட்டமாக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) உள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
இதையும் படிங்க : இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
பாதுகாப்பான முதலீடு செய்து அதிக லாபம் பெற சிறந்ததாக உள்ள திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NCS – National Savings Certificate). இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம்
சாமானிய மக்கள் முதலீடு செய்வதற்காக சிறந்த திட்டமாக இந்த கிசான் விகாஸ் பத்ரா (KVP – Kisan Vikas Patra) உள்ளது. முதலீட்டை இரண்டு மடங்காக உயர்த்த இந்த திட்டம் உதவி செய்கிறது. ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய முடியும்.
இதையும் படிங்க : இனி புதிய ரேஷன் கார்டு பெற கூடுதல் தாமதம்.. வெளியான முக்கிய தகவல்!
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திட்டம் தான் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு (SCSS – Senior Citizen Saving Scheme) திட்டம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்து அதிக லாபத்தை பெற முடியும்.