நாடு முழுவதும் அமுல், மதர் டெய்ரி பால் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்கள் ஷாக்!
Amul and Mother Dairy Milk Pockets Prices Hiked | இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் பால் மிக முக்கிய உணவு பொருளாக உள்ளது. இந்த நிலையில், அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய நிறுவனங்கள் தங்களின் பால் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
இந்தியர்களின் அன்றாட வாழ்வில் பால், தயிர் போன்றவை தவிர்க்க முடியாதவையாக உள்ளது. பலரது காலை பால், டீ அல்லது காப்பியில் தான் விடியும். இத்தகைய முக்கிய உணவு பொருளாக பால் உள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகியவை பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இந்தியா முழுவதும் இன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவங்கள் பால் விலையை உயர்த்தியது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பால் விலையை உயர்த்திய இரண்டு முன்னணி இந்திய நிறுவனங்கள்
கால்நடை தீவனங்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக பால் விலை மொத்தமாக உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, அந்த இரண்டு நிறுவனங்களும் பல வகையான பால்களின் விலைகளை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளன. அமுலின் பல்வேறு வகையான பால்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக அமுலின் டாசா, கோல்டு, பசும்பால், எருமை பால் மற்றும் டீ ஸ்பெஷல் ஆகிய பால்களுக்கான விலை அதிரடியாக உயர்த்துள்ளது.
இதையும் படிங்க : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு கிராமிற்கு ரூ. 1,070 அதிகரித்து விற்பனை




உயர்த்தப்பட்ட அமுல் பால் பாக்கெட்டுகளின் விலை – புதிய விலை பட்டியல் இதோ
- 500 எம்.எல் அளவு கொண்ட அமுல் பால் ரூ.29-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 500 எம்.எல் அளவு கொண்ட அமுல் சக்தி பால் ரூ.31-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 1 லிட்டர் அளவிலான டீ ஸ்பெஷல் பாலின் விலை ரூ.63-ல் இருந்து ரூ.66 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 500 எம்.எல் அளவு கொண்ட அமுல் கோல்டு பால் ரூ.34-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 500 எம்.எல் அளவு கொண்ட அமுல் டாசா பால் ரூ.28-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சொன்ன பிரதமர்.. மாற்று என்ன?
அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகிய நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ள நிலையில் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.