AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு.. இந்திய ரிசர்வ் வங்கி தகவல்!

India's Forex Reserves Jumps | மே 08, 2026 அன்று நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி 6.295 டாலர்கள் உயர்ந்து 696.988 அமெரிக்க டாலர்களாக இருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியா போர் காரணமாக பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு.. இந்திய ரிசர்வ் வங்கி தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 May 2026 21:59 PM IST

மும்பை, மே 16 : மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக இந்தியாவின் அன்னிய செலாவணி கடும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) கூறியுள்ளது. அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேற்கு ஆசியா போர் காரணமாக கடும் சவால்களை எதிர்க்கொள்ளும் உலக நாடுகள்

மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக கடும் சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி, நாட்டின் அந்நிய செலாவணியும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசலை தொடர்ந்து இந்த பொருட்களின் விலைகளும் உயரும் வாய்ப்பு.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த ஷாக்

பெரும் வீழ்ச்சி அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு

ஈரான் போர் தொடங்கியது முதலே இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. இதனை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி, டாலரை அதிக அளவில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் விளைவாக அன்னிய செலாவணி கையிருப்பு மெல்ல மெல்ல கரைந்து வந்தது. அதன்படி, மே 01, 2026 அன்றைய நிலவரத்தின் படி நாட்டின் அன்னிய செலாவணி 690.693 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது அடுத்த வாரமே உயர்வை சந்தித்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

அதாவது மே 08, 2026 அன்றுடன் நிறைவடைந்த வர்த்தகத்தின் அடிப்படையில், நாட்டின் அன்னிய செலாவணி 6.295 டாலர்கள் உயர்ந்து 696.988 அமெரிக்க டாலர்களாக இருந்ததாக கூறியுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.66 லட்சம் கோடியாக இருந்ததாக ஆர்பிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us