ஆதார் அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.. ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
UIDAI Extended Free Aadhaar Update | இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் கார்டை அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. ஜூன், 2026 உடன் முடிவடைய இருந்த அவகாசத்தை மேலும் ஒரு ஆண்டுகள் அதாவது ஜூன் 14, 2027 வரை நீட்டித்துள்ளது.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதற்காக சேவையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) இலவசமாக வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற ஜூன் 2026 தான் கடைசி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு அதற்கான கால அளவை நீட்டித்துள்ளது. அதாவது இன்னும் ஒரு ஆண்டுக்கு பயனர்கள் தங்களது ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூன் 14, 2027 வரை ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம்
ஆதார் கார்டில் ஒரு தனிநபரின் பெயர், முகவரி, வயது, பாலினம், புகைப்படம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். இதில் சில தகவல்கள் மாற்றத்திற்கு உரியது என்பதால், அதனை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. இதற்காக இலவச சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை ஜூன், 2026 வரை மட்டுமே வழங்க உள்ளதாகவும், அதற்கு பிறகு ஆதார் அப்டேட் செய்யும் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்த கால அவகாசம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு ஆண்டுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் 14, 2026 வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : PM Kisan : உங்கள் வங்கிக்கணக்குக்கு ரூ.2000 எப்போது வரும்? பிஎம் கிசான் பயனர்களுக்கு முக்கிய அப்டேட்!




ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
- முதலில் My Aadhaar பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு ஆதார் எண் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அந்த ஓடிபியை உள்ளிட்ட பிறகு Address Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் Update Aadhaar Online என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் எந்த விவரத்தை அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை உள்ளிட வேண்டும்.
- அதனை தொடர்ந்து அதற்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
மேலே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றி மிக எளிதாக உங்களது ஆதார் விவரங்களை அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.