என்பிஎஸ் திட்டத்தில் ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்?.. இபிஎஃப்ஓ விளக்கம்!
Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் என்பிஎஸ் என்ற திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. அது உயர்த்தப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வைரலான நிலையில், அது குறித்து இபிஎஃப்ஓ விளக்கம் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வுக்கு பிறகும் நிதி பாதுகாப்பை பெறும் வகையில், அரசு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் ஓய்வூ காலம் நிதி பாதுகாப்பு இல்லாததாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் தான் தனியார் துறை ஊழியர்களின் பணி ஓய்வை கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) செயல்பட்டு வருகிறது. அதாவது, தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றால் அவர்களுக்கு என்பிஎஸ் (NPS – National Pension Scheme) என்ற திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.




பென்ஷன் ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான அரசாணை?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. விலைவாசி உயர்வு, தேவைகள் அதிகரிப்பு உள்ளிட்டவற்றின் காரணமாக இந்த தொகை போதுமானதாக இல்லை என்றும், தற்போதைய கால சூழலுக்கு மாதம் ரூ.7,500 ஓய்வூதியம் வழங்குவது சிறப்பானதாக இருக்கும் என்றும் தொடர் கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் தான், ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில், அது குறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
இபிஎஃப்ஓ அமைப்பு விளக்கம்
⚠️ Attention!
The letter being circulated on increase in minimum EPS pension is completely fake#EPFO #EPFOFactCheck #EPFOWithYou pic.twitter.com/FKhxQrbzSj— EPFO (@officialepfo) May 19, 2026
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஃப்ஓ, ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக இணையத்தில் வெளியாகி வரும் கடிதம் முற்றிலும் போலியானது என்று கூறியுள்ளது.