AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை.. இன்றைய நிலவரம்!

Gold Price Increased and Silver Price Remain Same | சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் இன்று உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையில் மாற்றமில்லை.. இன்றைய நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jul 2026 10:26 AM IST

சென்னை, ஜூலை 20 : சென்னையில் (Chennai) நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூலை 20, 2026) தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம்

ஈரான் போருக்கு மத்தியில் ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாதத்தில் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் போர் வலுவடைந்துள்ள நிலையில் தங்கம் இத்தகைய தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ரூ.13,000-ல் நீடித்து வருகிறது. தங்கம் விலை தொடர் சரிவை சந்திக்கும்போது ஒரு கிராம் ரூ.12,000-க்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூ.13,000 என்ற நிலையிலேயே தங்கம் விலை நீடித்து வருகிறது.

இதையும் படிங்க : Gold : கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்கம் வாங்கலாமா?.. விதிமுறைகள் என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us