AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜூலை 26, 2026 ஞாயிற்றுக்கிழமைத வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஜூலை 21, 2026 இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றுமுதல் 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Jul 2026 06:39 AM IST

சென்னை, ஜூலை 21 :  தமிழகத்தில் ஜூலை 21, 2026 முதல் ஜூலை 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை 21, 2026 ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசான மழையும், 22, 23 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஜூலை 23, 2026 வரை வெப்ப நிலையும் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

மேலும், ஜூலை 24, 2026 வெள்ளிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து ஜூலை 25, 26, 2026 ஆகிய 2 நாட்கள் தமிழத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 24-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த முதல்வர்.. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் விஜய் திடீர் விசிட்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 21, 2026 இன்று முதல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்பநிலை உயரும் என எச்சரிக்கை

மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கும் அதே நேரம் தமிழகத்தின் இதர பகுதிகளில் ஜூலை 23, 2026 தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழத்தில் ஜூலை 23, 2026 வரை கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை ஒட்டி இருக்கும். குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. உள் தமிழகத்தில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. 1,750 கிலோ சிவப்பு தங்கம் கொள்ளை.. அரசு கிடங்கில் மர்ம நபர்கள் அத்துமீறல்!

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் வட சூழல் மற்றும் தீவிர சூரியக் கதிர்வீச்சு ஆகியவை காரணமாக பகல் நேர வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடுத்த 3 நாள்களில், வட தமிழகம், கிழக்கு-மத்திய மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள் ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us