AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மின் கட்டணம் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் கொடுத்துள்ளார். அசாதாரணமான பில்லிங் முறையால் பொது மக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

மின் கட்டணம் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசு விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 19 Jul 2026 20:58 PM IST

சென்னை, ஜூலை 19 : தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. குறிப்பாக தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிப்பு எதுவும் இல்லாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மின்சார துறையின் சில பிரிவுகளில் நடைபெறும் அசாதாரணமான பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் திடீர் உயர்வுக்கு என்ன காரணம்?

மேலும், மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் தவறான மற்றும் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பழுதடைந்த மீட்டரின் மின் அளவுகளில் இருந்து ஆரம்பத்திலேயே பிரச்சனையை பிரிவு அலுவலகம் கண்டறிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. இஸ்ரோ தலைவர் நாராயணன் நச் பதில்!

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைந்த பிறகு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்துவருகின்றன. குறிப்பாக கடந்த முறை கட்டியதைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்தி வருகின்றனர். இதனையடுத்து சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் அதிக கட்டணம் பதிவாகியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கிறது.

இதையும் படிக்க : சமணர் படுகை மலையேறி படுத்துப் பார்த்த அமைச்சர் ராஜ்மோகன்.. மதுரையில் நடந்த திடீர் ஆய்வு!!

எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்துக்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Follow Us