கோவில்பட்டியில் திடுக்கிடும் சம்பவம்.. ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் விபரீத முடிவு.. பின்னணி என்ன?
Retired Forest Employee Self Harm : தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு வனத்துறை ஊழியர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள பாபா நகரை சேர்ந்தவர் மாடசாமி ( 65 வயது). இவர், வனத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக அவர்களைப் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கீழ் தளத்தில் தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஓய்வு பெற்ற வன ஊழியர் மாடசாமி நேற்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 4- ஆம் தேதி) திடீரென கையிறால் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காமல் இருந்தால் அக்கம், பக்கத்தின் சந்தேகம் அடைந்தனர்.
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த வன ஊழியர்
அவர்கள், மாடசாமி வீட்டின் கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. மேலும், கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால், மேலும் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்த போது, ஓய்வு பெற்ற வன ஊழியர் மாடசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் படிக்க: பழங்குடிகளிடம் ரூ.1 கோடி லஞ்சம்.. சிக்கிய 6 வனத்துறை ஊழியர்களுக்கு செக்.. திருவண்ணாமலையில் அதிரடி நடவடிக்கை..!
குடும்ப பிரச்னை காரணமா
இதை தொடர்ந்து, அவரது சடலத்தை மீட்ட போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இவர், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக மாடசாமி தற்கொலை செய்து கொண்டாரா.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி மற்றும் மகனை தெரிந்து மாடசாமி தனியாக வசித்து வந்த நிலையில், அதன் காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மாடசாமி தொடர்புடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம், பக்கத்தில் ரசித்து வரும் நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் . . .
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: டபராவில் பெண் உடல் வேகவைக்கப்பட்ட சம்பவம்.. ஆக்ரா போலீசுக்கு சென்னை போலீஸ் அவசர கடிதம்.. என்ன காரணம்!