AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை.. திட்டவட்டமாக தெரிவித்த மாநில செயலர் மு. வீரபாண்டியன்!

Communist Party Of India Secretary Veerapandian : தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற வில்லை என்று அந்தக் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித் து உள்ளார் .

தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இல்லை.. திட்டவட்டமாக தெரிவித்த மாநில செயலர் மு. வீரபாண்டியன்!
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Sep 2026 17:14 PM IST

சென்னை மாவட்டம், பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் வருகிற செப்டம்பர் 9- ஆம் தேதி 9 புதன்கிழமை) தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக ஆதரவு கட்சிகளுக்கு பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இதே போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை டிநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். அப்போது, இரு கட்சிகளின் மாநில செயலாளர்களான வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த சில நாட்கள் முன்பு நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காத நிலையில், தற்போது, 2- ஆவது கூட்டத்தில் பங்கேற்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெளிவுப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேலும் படிக்க: “யாரும் ஓடிவிட வேண்டாம் என்பதா?.. கையில் அருவா கம்போடு வரப் போகிறாரா?”.. நயினார் நாகேந்திரன் விளாசல்!!

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு

தமிழக வெற்றிக் கழக அரசின் நல்லாட்சி மற்றும் நல திட்டங்களை வரவேற்று ஆதரவு வழங்குவோம். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க கூடாது என்று அரசு அதிகாரிகள் பிறப்பித்த சுற்றறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது. தமிழக மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழி நடத்த வேண்டும்.

தவெக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெறவில்லை

இந்த நடைமுறை தமிழகத்தில் தலை கீழாக உள்ளது. அதிகாரிகள் தான் ஆட்சியாளர்களை வழி நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை. தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெளியில் இருந்தே ஆதரவு தெரிவிப்போம். தெரிவித்து வருகிறோம். தவெக கூட்டணியில் நாங்கள் இடம் பெறவில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவெக தலைவர்களின் மெகா பிளான்.. கம்யூனிஸ்ட் கட்சிகளை ஈர்க்குமா விஜய் தரப்பின் புதிய வியூகம்?

Follow Us