AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டபராவில் பெண் உடல் வேகவைக்கப்பட்ட சம்பவம்.. ஆக்ரா போலீசுக்கு சென்னை போலீஸ் அவசர கடிதம்.. என்ன காரணம்!

Woman Body Found In Suitcase : சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் சூட்கேஸில் பெண் சடலம் கைப்பற்றப்பட் ட வழக்கில் பெண்ணின் உடல் பாகங்களை வழங்குமாறு ஆக்ரா காவல் துறைக்கு சென்னை போலீசார் கடிதம் எழுதி உள்ளனர் .

டபராவில் பெண் உடல் வேகவைக்கப்பட்ட சம்பவம்.. ஆக்ரா போலீசுக்கு சென்னை போலீஸ் அவசர கடிதம்.. என்ன காரணம்!
கொலையாளிகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 05 Sep 2026 16:36 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு விரைவு ரயிலில் பெண்ணின் சடலம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸை ஆக்ரா ரயில் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி இருந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட பெண் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்த ஹயதுல்லா நிஷா என்பது தெரியவந்தது. இந்த நிலையில், ஆக்ரா காவல்துறை கைப்பற்றிய ஹயதுல்லா நிஷாவின் உடல் பாகங்களை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு கூடுவாஞ்சேரி போலீசார், ஆக்ரா காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில், உடல் பாகங்களை தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் தான் கொலை சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கும். மேலும், உடல் பாகங்களை பொருத்தி பார்த்து அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவால் நிகழ்ந்த கொலை

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹயதுல்லா நிஷா, வட மாநிலத்தில் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர், அவரது மனைவி பாகபதி மாஜி ஆகியோர் தாம்பரம் அருகே தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் தாம்பரம் பகுதியில் தனியாக வீடை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இதில், மாணிக் உத்தினுக்கும், ஹயதுல்லாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹயதுல்லா 7 மாத கர்ப்பம் ஆகி உள்ளார். அப்போது, கர்ப்பத்தை கலைத்து விடுமாறு மாணிக் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தந்தையின் நண்பர் வீட்டில் கைவரிசை.. 9 பவுன் நகையை திருடி காதலனுக்கு புதிய KTM பைக் வாங்கி கொடுத்த காதலி கைது.. கோவையில் தில்லாலங்கடி சம்பவம்!

தலையை வெட்டி வீசி, தோல், சதையை வேக வைத்த கொடூரம்

இதற்கு ஹயதுல்லா மறுப்பு தெரிவித்த நிலையில், மாணிக் மற்றும் அவரது மனைவி பாகபதி ஆகியோர் அவரை கொலை செய்து தலையை துண்டித்து வேறொரு பகுதியில் வீசி உள்ளனர். அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சிகப்பு நிற சூட்கேஸில் வைத்து டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் அனுப்பியுள்ளனர். மேலும், அவரின் சதைப் பகுதிகளை வெட்டியதுடன், தோலை உரித்து பிரியாணி டபராவில் வைத்து அவரது உருவம் மற்றும் கொலை சம்பவம் தெரியாத வகையில் வேக வைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அனைத்தும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கொலை சம்பவத்தில் தொடர்புடைய தம்பதி கைது

ரயில் நிலையத்தில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மாணிக் உத்தின் மற்றும் அவரது மனைவி பாகபதி ஆகியோர் மணிப்பூர் தப்பி சென்ற நிலையில், அவர்களது செல்போன் சிக்னல் மூலமாக போலீசார் பின் தொடர்ந்து சென்று அதிரடியாக கைது செய்தனர். தற்போது, அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கோவையில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கடவுள் ரூபத்தில் வந்த தெருநாய்.. தலைதெரிக்க ஓடிய 16 வயது சிறுவன்!

Follow Us