பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை மீண்டும் தொடக்கம்… எப்போது தெரியுமா? நிர்வாகம் வெளியிட்ட அந்த தேதி!
Palani Dandayuthapani Murugan Temple Rope Car : பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் வருகிற செப்டம்பர் 12- ஆம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது .
தமிழகத்தில் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக உலக புகழ்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி பால தண்டாயுதபாணி முருகன் கோவில் விளங்கி வருகிறது. மிகவும் பிரபலமான இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இதன் காரணமாக சாதாரண நாட்களிலும் விசேஷ நாட்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படும். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படி ப்பாதை, யானை பாதை ஆகியவை பிரதான வழிகளாக இருந்து வருகிறது. அத்துடன், பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து வருவதற்கு ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
செப்டம்பர் 12- இல் மீண்டும் ரோப் கார் சேவை
இந்த ரோப் கார் சேவையானது பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில், கடந்த ஜூலை 20- ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், புதிய பெட்டிகள் பொருத்தம், புனரமைப்பு பணிகள், சோதனை ஓட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. தற்போது, இந்த சோதனை பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வருகிற செப்டம்பர் 12- ஆம் தேதி முதல் ( சனிக்கிழமை) மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்பட உள்ளதாக பழனி முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. சென்னை, திருச்சியில் 10 இடங்களில் தீவிர ஆய்வு!




45 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார் சேவை
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. ஏனென்றால், இதில் செல்லும்போது மழையின் இயற்கை அழகை ரசித்தபடியே பக்தர்கள் சென்று வர முடியும். இதனால் பக்தர்கள் மத்தியில் ரோப் கார் சேவைக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20- ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு இயங்காது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாற்று பாதைகளை பயன்படுத்தி வந்த பக்தர்கள்
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், மின் இழுவை ரயில் மற்றும் படி பாதைகளை பயன்படுத்தி கோவிலுக்கு சென்று வந்தனர். தற்போது, ரோப் கார் சேவைக்கான பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனை ஓட்டம் ஆகியவை நிறைவடைந்து 12- ஆம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: போடி – தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர சிறப்பு ரயில்.. அட்டவணை இதோ!