போடி – தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர சிறப்பு ரயில்.. அட்டவணை இதோ!
Weekly Special Train Between Bodi and Tambaram | போடி - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை குறித்து பார்க்கலாம்.
போடி, செப்டம்பர் 05 : போடி – தாம்பரம் (Bodi – Tambaram) இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 2026, ஜுலை மாதம் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில், போடி – தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரயிலின் நேரம் அட்டவணை குறித்தும், இந்த ரயிலின் மூலம் எந்த எந்த பகுதி மக்கள் பயனடைவார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போடி – தாம்பரம் இடையே மீண்டும் சிறப்பு ரயில்
இந்திய பொதுமக்களின் பிரதான போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து உள்ளது. இதன் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். எனவே, பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், இந்திய ரயில்வே புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தான், போடி – தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கர்ப்பிணி காதலியை கொலை செய்த காதலன்.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!
வாராந்திர சிறப்பு ரயில் – அட்டவணை இதோ
சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், மறு நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு போடி சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு போடியில் இருந்து புறப்படும் ரயில், திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையும். விழுப்புரம், திருச்சி வழியாக இயக்கப்படும் இந்த ரயிலில் மொத்தம் 6 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்ளன.
இதையும் படிங்க : செப்.9-ல் தவெக ஆதரவுக் கட்சிகளின் முக்கியக் கூட்டம்.. வைகோ, சிபிஐ, சிபிஎம் தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு!
இந்த 6 பெட்டிகளில் பெண்களுக்கென பிரத்யேக பெட்டி ஒன்றும் உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டின் கட்டணம் ரூ.235 ஆக உள்ளது. வரம்தோறும் சுமார் 600 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயணம் செய்ய முடியும். இந்த ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை பயன்பாட்டில் இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.