AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கர்ப்பிணி காதலியை கொலை செய்த காதலன்.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

Man Killed 7 Month Pregnant Wife In Salem | சேலத்தில் 7 மாத கர்ப்பமாக இருந்த காதலியை அவரது காதலன் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை மூட்டை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி காதலியை கொலை செய்த காதலன்.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!
கொலை செய்த அம்மாசி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Sep 2026 07:46 AM IST

சேலம், செப்டம்பர் 05 : சேலம் (Salem) மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள பேராக்கவுண்டர் என்பவர் உள்ளார். இவருக்கு 23 வயதில் கோகிலா என்ற மகள் இருந்துள்ளார். பட்டதாரியான இவருக்கு, பக்கத்து ஊரான கன்னியாம்பட்டி பகுதியை சேர்ந்த அம்மாசி என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

7 மாதம் கர்ப்பமாக இருந்த கோகிலா – உடல்நல பரிசோதனையில் ஷாக் தகவல்

இந்த நிலையில் தான், கோகிலாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை குடும்பத்தார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த தகவல், கோகிலாவின் குடும்பத்தார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதற்கு அம்மாசி தான் காரணம் என கோகிலா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்.. பேரவை முடிந்த பின் முடிவு அறிவிப்பு.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

கோகிலாவை காதலனுடன் அனுப்பி வைத்த போலீஸ்

புகாரின் அடிப்படையில் அம்மாசியை அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கோகிலாவை அவருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், தான் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டப்பட்டு, கிணற்றில் இருந்து கோகிலாவின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. காதலனுடன் சென்ற 7 மாத கர்ப்பிணியாக கோகிலா, சடலமாக மீட்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தந்தையின் நண்பர் வீட்டில் கைவரிசை.. 9 பவுன் நகையை திருடி காதலனுக்கு புதிய KTM பைக் வாங்கி கொடுத்த காதலி கைது.. கோவையில் தில்லாலங்கடி சம்பவம்!

கர்ப்பிணி காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்த காதலன்

இது தொடர்பாக அம்மாசியிடம் விசாரணை நடத்தியபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன. அதாவது, குடும்பம் நடத்துவதாக கோகிலாவை அழைத்துச் சென்ற அம்மாசி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை வெளியே சோல்லி தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக சண்டையிட்டுள்ளார். இதனால், இருவருக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் கோகிலாவை அடித்துள்ளார்.

அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில், துப்பட்டாவல் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியுள்ளார்.

Follow Us