AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்.. பேரவை முடிந்த பின் முடிவு அறிவிப்பு.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

Esaki Subbiah MLA Resignation : அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவின் ராஜினாமா தொடர்பா ன நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்.. பேரவை முடிந்த பின் முடிவு அறிவிப்பு.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 04 Sep 2026 20:24 PM IST

தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இசக்கி சுப்பையா மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற திங்கள் கிழமை ( செப்டம்பர் 7- ஆம் தேதி) முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரை உள்ளது. தமிழக சட்டமன்ற தலைவர் என்ற பொறுப்பில் என்னை அமர வைத்த பெருமை அனைத்தும் முதல் அமைச்சரையை சேரும். சட்டப்பேரவையில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் சரியான ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்

அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக மக்களுக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட இன்னும் அதிகமாக செயலாற்றுவார்கள் என நம்புகிறேன். அதிமுக முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், ராஜினாமாவை திரும்ப பெரும் விவகாரம் தொடர்பாக என்னிடம் கடிதம் கொடுத்துள்ளார். இந்த கடிதத்தின் மீதான ஆய்வு நிலுவையில் உள்ளது. தமிழக சட்டப்பேரவை வருகிற செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8- ஆம் தேதி) நிறைவடைகிறது.

மேலும் படிக்க: திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!

சட்டப்பேரவை தொடர் முடிந்த பின் முடிவு

இதன் பின்னர் இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம் தொடர்பான முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்ந்து, அதிமுகவிலிருந்து இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் கைவிட்டிருந்தார். இதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

ராஜினாமாவை திரும்ப பெற்று எம்எல்ஏ-வாக தொடர அனுமதி

இதனிடையே, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த இசக்கி சுப்பையா தனது ராஜினாமாவை திரும்ப பெற்று எம்எல்ஏ பதவி தொடர அனுமதிக்க கோரி சட்டப்பேரவை செயலர் சாந்தியிடமும், சென்னை உயர்நீதி மன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். இதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்காமல் மனுவை தள்ளுபடி செய்திருந்தது. அதே வேளையில் இந்த கடிதத்தை ஏற்பதற்கு சட்டத்தின் இடமில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அத்துடன் இசக்கி சுப்பையாவின் ராஜினாமா ஏற்கப்பட்டு அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு இடைத்தேர்தல் மட்டுமே தீர்வாகும் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க: தம்பியை தாக்கிய வழக்கு.. புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அமைச்சர் மரியவில்சன்!

Follow Us